Monday, July 08, 2013

50. வண்ணத்துப் பூச்சிகளைத் தேடி .....







*


கூட்டம் கூட்டமாக வண்ணத்துப் பூச்சிகள் இருக்கு .. போட்டோ எடுக்கப் போகலாமா என்ற நண்பர்களுடன் பல ஆண்டுகள் கழித்து அழகர்கோவிலுக்குச் சென்றோம்.

நான் மாணவனாக இருந்த காலத்தில் insect collection  என்ற பெயரில் ‘பூச்சி பிடிக்கப்’ போனது நினைவுக்கு வந்தது. அதன் பின் பல ஆண்டுகள் மாணவர்களை அழைத்துப் போனதும், அப்போதெல்லாம் நடந்தவைகளும்  நினைவுக்கு வந்தன.


அப்போதெல்லாம் கீழே ஒரு தெப்பம் இருக்கும். அதிலிருந்து தனியாக ஓடை ஒன்றில் தண்ணீர் மலையிலிருந்து வந்து கொண்டு இருக்கும். அந்தப் பாதை வழியாகவே செல்வோம். இப்போது அந்த ஓடை இருக்கிறது. தண்ணீர் அதிகமில்லை. பாதி வழி காரில் ஏறி அந்த ஓடையில் ஒரு காலத்தில் வண்ணத்துப் பூச்சிகள் நிறைய இருக்கும் இடத்திற்கு முதலில் சென்றோம். ஏற்கெனவே வண்ணத்துப் பூச்சிகள் நிறைய இருக்கும் இடம் என்று ரவி சொன்ன இடம் அதற்கு சிறிது மேலே கருடன் சாமி கோவிலுக்கு எதிரில் இருந்தது.
அனுமார் கோவிலுக்கு வழிகாட்ட ஓர் உடைந்த உருவத்தில் ...
 அதற்கு எதிர்த்தாற்போல் ஆஞ்சநேயர் சாமி கோவில். கோவில் போகும் இடத்தில் வழிகாட்ட ஒரு உடைந்த சிமண்ட் சிலை பரிதாபமாகக் கீழே கிடந்தது. 

நாங்கள் கருடன் சாமி கோவிலுக்குப் போனால் பெரிய ஏமாற்றம் நாலைந்து பூச்சிகள் மட்டுமே கண்ணில் பட்டன. அவைகளை ஓடிப்பிடித்து படம் எடுக்க முயன்றோம். இன்று ஏன் பூச்சிகள் இல்லை என்றதும் அவைகளின் biological clocks  நினைவுக்கு வந்தது. வெயில் ஏற ஏற பூச்சிகள் வரும் என்பது தெரிந்ததும் மலை மேலே தீர்த்தத் தொட்டி வந்தோம்.  நிறைய குரங்காட்டம் பார்த்தோம்.
பயமா இருக்குல்ல ...?!

FEEDING THE BABY
அன்னையின் மடியில் ....
பெரிய்ய்ய்ய சைஸில் பழந்தின்னி வவ்வால்கள் ஒரு பெரிய மரத்தில் தொங்கிக் கிடந்தன. தனி வவ்வாலைப் படம் எடுக்க முடியவில்லை.

மயில் பீலி வைத்து ஆசிர்வாதம் பண்றார் .... ஆனால் யாரும் ‘தட்சணை’ போடலை .. பாவம்!
தீர்த்தத் தொட்டியில் இருந்து குளித்து வருவோருக்கு மயில் பீகை வைத்து ஆசிர்வாதம் பண்ணிக்கொண்டிருந்தார் ஒரு பெரியவர். பாவி மனுசங்க .. யாருக்கும் அவருக்கு காணிக்கை போட மனசில்லை. நான் நினைச்சேன் .. ஆனால் போடலை! பாவமா இருந்திச்சு ..



மொட்டை போட்டாச்சு ...  சந்தனம் எங்கே...!?

வெயில் ஏறியதும் கீழே இறங்க ஆரம்பித்தோம். தீர்த்தத் தொட்டிக்குக் கொஞ்சம் கீழேயே  சாலை ஓரத்திலேயே கூட்டம் கூட்டமாக இரண்டு புள்ளிகளில் நிறைய்ய்ய்ய வண்ணத்துப் பூச்சிகள் வருவதும் .. பறப்பதும் ... என்று வேடிக்கை காட்டின. படம் எடுப்பதை விட அவைகளை வீடியோவில் எடுத்தோம்.

அதன்பின் கருடன் கோவிலுக்கு வந்தால் நல்ல வேட்டை. ... அதன்பின் அனுமார் கோவிலுக்குப் பக்கத்தில் இருந்த ஓடையிலும் நிறைய வண்ணத்துப் பூச்சிகள் - தனியாகவும் ... கூட்டம் கூட்டமாகவும் ....

 கூட்டம் கூட்டமாக இருப்பது mud sipping  - தண்ணீர் குடிக்கவாம். அப்போதெல்லாம் நாம் எவ்வளவு பக்கம் போனாலும், நம் காமிராவை எவ்வளவு பக்கத்தில் கொண்டு போனாலும் சாதுக்கள் மாதிரி நம்மை அவைகள் ஒன்றும் கண்டுகொள்வதில்லை. ஆனால் தனியாக இருக்கும்போது பக்கத்தில் போவதிற்குள் பறந்து விடுகின்றன. Some animal behaviour....
















*
உடைந்த நிழல் ...








பச்சைச் செடிகளுக்கு நடுவில் அப்படி ஒரு சிகப்பு






 




1 comment:

ராமலக்ஷ்மி said...

அற்புதமான படங்கள்.