Saturday, July 06, 2013

49. குருவி கண்டேன் .. குருவியே கண்டேன் ...






*




அட போ’மா! உன்னைப் பார்த்து எத்தனை வருஷமாச்சு!

சும்மா வீட்டுக்குள்ள வந்து தகராறு செஞ்சிக்கிட்டு இருப்பாய். அப்போ உன்னைப் போய் விரட்டி விரட்டி அடிச்சேனேன்னு இப்போ நினச்சிப்  பார்க்கிற போது ரொம்ப கவலையாக இருக்குது. எத்தனை முறை நீ கட்டிய உன் வீடுகளைக் கலைத்துப் போட்டிருப்பேன்.














உன்னை ஒரு பெரிய தொல்லையாக நினைத்த நாட்கள் எத்தனை எத்தனை! உன் கீச்சல்கள் அன்று எரிச்சலைத் தந்தன. இப்போது அவைகளைக் கேட்டு நாளாகி விட்டனவே என்று வருத்தமாக உள்ளது.




உன்னைப் பார்த்து தான் எத்தனை வருஷங்களாகி விட்டன. உன்னைப் பார்ப்பதற்கே கூர்க் வந்தது போல் தெரிகிறது. உன்னைப் பார்த்ததும் அத்தனை சந்தோஷம். ஒரு கவலை. உன்னை ஒரு கூட்டமாகப் பார்க்க முடியாமல் உன்னைத் தனியாக, தனியாக இருந்த உன்னை மட்டும் பார்த்தத் கவலை தான். உன் கூட்டமெல்லாம் எங்கே போனது?!

இருந்தும் உன்னை மட்டுமாவது பார்த்தேனே. உன்னைப் பார்த்த இடம் கூர்க்கில் உள்ள ராஜாவின் திட்டு - RAJA'S SEAT - தனியாளாக நீ மண்ணில் புரண்டு ... பின் என் சத்தத்தில் மேலெழுந்து பறந்து கயிறொன்றில் அமர்ந்து இருந்த  சில நிமிடங்களில் உன்னை ஓரிரு முறை மட்டுமே ‘க்ளிக்’ பண்ண முடிந்தது.



கைத் தொலைபேசியின் கூண்டுகள் உன்னை விரட்டி அடித்து விட்டதாமே. எப்படியோ அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கிறீர்கள் போலும். உங்களைப் பார்க்க ... கூட்டமாகப் பார்க்க ஆவல். வருமோ அந்த நாள் .... ?



*

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

இதோ பார்த்தாயிற்று படத்தில்...! நன்றி...

வரும் காலங்களில் பார்ப்பது சிரமம் தான்...